Thursday, March 13, 2025
Google search engine
HomeSri Lankaஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்! வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் தினம் இன்றாகும்.

அதன்படி, இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நிறைவடையும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்களிப்பு நிலையப் பகுதிக்கான மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வேட்புமனு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நியமனக் கடிதங்களை மார்ச் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், எதிர்வரும் மார்ச் மாதம்13 ஆம் திகதி போயா தினமாக இருந்தாலும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் திறந்திருக்கும் என்று அந்த ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கடந்த 03 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments