Thursday, March 13, 2025
Google search engine
HomeSri Lankaமகிந்தவின் இல்லம்! அநுர அரசிடம் முக்கிய கோரிக்கை

மகிந்தவின் இல்லம்! அநுர அரசிடம் முக்கிய கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆக்கிரமிப்பதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முனவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கூறுகையில்,இலங்கையில் கடந்த தேர்தலில் மக்கள் ஏமாற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டதற்கு எதிராக இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உகண்டாவில் பணம் இருப்பதாகவும், அந்நாட்டிலிருந்து டாலர்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதாகவும் அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

பெரிய அளவிலான திருட்டுகளில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், மக்களுக்கு நிவாரணம் வழங்க உகண்டா அல்லது துபாயில் உள்ள எந்தவொரு பணத்தையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆக்கிரமிப்பதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments