கிழக்கு மாகாணத்தின் கல்முனைப் பகுதியில் இயங்கும் ஒரு தீவிரவாத அமைப்பு குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பாதுகாப்புப் படையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.
கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்ட அத்தகைய குழு பற்றிய தகவல்கள் உள்ளன. மேலும் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் அது தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் உரையாற்றியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இருப்பினும், பாதுகாப்புப் படையினர் தற்போது விழிப்புடன் இருப்பதாகவும், நிலைமையை தீவிரமாக மதிப்பிட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.