போரின் போது சிறைபிடிக்கப்பட்ட 175 உக்ரைன் (Ukraine) கைதிகள் மற்றும் பலத்த காயமடைந்த 22 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் 75 ரஷ்ய(Russia) கைதிகளும் மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா (Russia) – உக்ரைன் (Ukraine) இடையே போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், இருநாடுகளில் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப் பேற்ற டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இருப்பினும், போர் நிறுத்தத்திற்கு தயார் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே போரின் போது சிறைபிடிக்கப்பட்ட 175 உக்ரைன் கைதிகள் மற்றும் பலத்த காயமடைந்த 22 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் 75 ரஷ்ய கைதிகளும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.