தாங்கள் ஆட்சிபீடத்திற்கு வருவதற்காக மக்களை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடகூடாது என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுகுழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்தார்.
இலங்கையில் அண்மைய காலங்களில் நடைபெற்றுள்ள துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக, கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு விவகாரமானது தற்போதைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான போக்கை எடுத்துக்காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் விசனம் வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தநிலையில், மக்கள் மத்தியில் இவ்வாறான பயஉணர்வுகளை ஏற்படுத்தும் போது அவர்களின் மனநிலை மாற வாய்ப்புள்ளது. அதனையே ராஜபக்ச தரப்பு செய்வதாக சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்த் நேர்காணலின் போது சுட்டிக்காட்டினார்.