பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான பாடசாலை மாணவர்களுக்கான காலக்கெடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் அதுவரை காலமும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுடன் பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நிறைடையவிருந்த நிலையில், கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.