ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடல் நலக்குறைவால் விரைவில் உயிரிழப்பார் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளர்.
புடின் உடல் நிலை தொடர்பாக வதந்திகள் பல பரவிவரும் நிலையில், முகம் வீங்கியிருப்பது, கை கால்களில் நடுக்கம் காணப்படுவது போன்ற அறிகுறிகள் அவரிடம் காணப்படுவதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ஜெலன்ஸ்கியின் மேற்குறித்த கருத்தானது பெரும் அதிர்லவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்தித்து கலந்துரையாடும் போதே ஜெலன்ஸ்கி மேற்குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மேலும் தொிவிக்கையில்,
புடின் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளிருந்து தாக்க முயல்கிறார். இதேவேளை ஹங்கேரி, ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
மேலும், புடின் விரைவில் இறந்துவிடுவார், நிலைமை விரைவில் முடிவுக்கு வரும் என அவா் மேலும் குறிப்பிட்டுள்ளார்.