நடிகை பிரியங்கா மோகன் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான பிரதர் என்ற திரைப்படத்தில் நடிகர் ரவி மோகனுக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பூஜை போடும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலானது. கழுத்தில் மாலையும் கழுத்துமாக ஜெயம் ரவியுடன் நெருக்கமாக நின்று கொண்டு நடிகை பிரியங்கா மோகன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
கெடுவாய்ப்பாக அந்த நேரத்தில் தான் நடிகர் ரவி மோகன் தன்னுடைய விவாகரத்து செய்தியை வெளியிட்டு இருந்தார். கையோடு பிரியங்கா மோகனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
சில ஆசாமிகள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்று இடையே பக்கங்களில் வைரல் ஆக்கினார்கள்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரியங்கா மோகன் இடம் கேள்வி எழுப்பப்பட்டது . இந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்தீர்களா..? உங்களுக்கும் நடிகர் ரவி மோகனுக்கும் நிச்சயதார்த்தம் என்ற செய்திகள் வெளியானதே..! இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது குபீரென சிரித்த பிரியங்கா மோகன்.. ஆம் எனக்கும் இது தெரியும்.. என்னுடைய குடும்பத்தினரும் பார்த்தார்கள்.. இதை பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது.. எப்படித்தான் இதை ஒரு செய்தி என்று வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை.
என்னுடைய குடும்பத்திற்கு தெரியும் நான் ரவி மோகன் சார் உடன் நடிக்கிறேன் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.
ஆனால், செய்தியை முதல்முறை படித்தவுடன் எனக்கு ஷாக் ஆகி விட்டது. என்னுடைய குடும்பத்தினரும் ஷாக் ஆகி விட்டார்கள். அதேபோலத்தான் ரவி மோகன் சாருக்கும் ஏற்கனவே நிறைய பிரச்னைகளில் இருக்கிறார் இது புதிய பிரச்சனையாக அவருக்கு வந்திருக்கிறது என புன்முறுவலுடன் பேசி இருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.