படலந்த தொடர்பிலான விசாரணை ஆரம்பிக்கப்பட்டாலும் அதற்கான தீர்வினை கண்டுப்பிடிப்பார்களா என்பது கேள்விக்குறியே என பொருளாதார ஆய்வாளர் பாலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காகவும், தேர்தலை மையப்படுத்தியுமே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அநுர அரசாங்கம் வந்தவுடனே மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவின் ஊழலை வெளிக்கொண்டு வருவோம், பணத்தை மீட்போம் என்றார்கள், ஆனால் 100 நாட்களாகியும் ஒன்று செய்யவில்லை.
இது ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.