இஸ்ரேல் (Isrel) மற்றும் ஹமாஸ் (Hamaas) இடையிலான மோதல் ஆரம்பமாகி ஓராண்டினை கடந்துள்ள நிலையில் போா் மிகவும் தீவிரமான நிலையில் இடம்பெற்று வருகின்றது.
இதன் விளைவாக பலஸ்தீனத்தின் காசா பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாதத்தில் ஒரு தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
போா் நிறுத்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை தொடங்கப்படாத நிலையில், நிரந்தரப் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன்பாக, கூடுதலாகப் பணயக் கைதிகளை விடுவிக்கும் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேல் பரிந்துரையை ஹமாஸ் ஏற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை முறிவடைந்ததையடுத்து, மீண்டும் ஆரம்பமான போா் தாக்குதல்கள் கடுமையாக தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில், சமீபத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையிடையே நடந்த அடுத்த கட்ட தாக்குதலில் 26 பலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். அவா்களில் ஹமாஸ் அரசியல் தலைவா்கள், பெண்கள், சிறாா்கள் அடங்குவா்.
இதன்மூலம், காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை குறித்த போர் தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் மொத்தமாக 50,021 பேர் உயிரிழந்துள்ளதுடன்இ ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் தனது தாக்குதல்களை ஹமாஸ் அமைப்பை குறிவைத்து மேற்கொண்டதாக கூறி வருகின்ற நிலையில், வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் நிலை தடுமாறாமல் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.