பிரிட்டனில் கடுமையான மூடுபனி நிலவுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, இன்று (26) காலை 4.00 மணி முதல் 10.00 மணி வரை குறித்த மஞ்சள் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, Norwich, Cambridge, Ipswich மற்றும் Middlesbrough ஆகிய இடங்களில் மூடுபனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் மக்கள் இதன் தாக்கத்திற்கு உள்ளாகலாம் என்பதால், வாகன ஓட்டிகள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அண்மைய நாட்களாக பிரிட்டனில் பனியுடனான வானிலை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே மேற்குறித்த அறிவிப்பு வெளியானது மக்களுக்கு தொடர் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.