இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு இணைய விளையாட்டுகளை எதிர்த்து அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, சில இணையதளங்கள் பன்னாட்டு அளவில் செயல்பட்டு, இந்திய வரி சட்டங்களை பின்பற்றாமல், ஜி.எஸ்.டி. பதிவு செய்யத் தவறியுள்ளன. இதன் காரணமாக, இந்த இணையதளங்கள் சட்ட விரோதமாக வரி தவிர்ப்பு செயலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசு 357 வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளை தடை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த இணைய விளையாட்டுகளுடன் தொடர்புடைய சில வங்கி கணக்குகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இது, சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் இணையதளங்களை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.