தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறுப்பட்ட துறைகளிலும் தொடர்ந்து சாதனைகளை புாிந்து வருகின்றாா்.
இந்த வகையில் கார் ரேஸிங்கிலும் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்குமார் அதிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக அவர் தலைமையிலான ரேஸிங் அணி இத்தாலியில் நடைபெற்ற பிரபல 12H Mugello Circuit கார் ரேஸில் கலந்துகொண்டு GT992 பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, துபாய் மற்றும் போர்த்துக்கலில் நடைபெற்ற போட்டிகளில் இவரது அணி சிறப்பாக விளையாடி முத்திரை பதித்தது.
தற்போது, இத்தாலியில் நடந்துள்ள இந்த போட்டியிலும் வெற்றியை தொடர்ந்து, அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்திற்கு ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் சினிமாப் பிரபலங்கள் உட்பட அனைவரும் நடிகர் அஜித்திற்கு தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தொிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.