சீனாவில் (China) நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தவர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்றும், மேலும் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்றும் கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைகளை மீளமுடியாதவை மற்றும் அடிப்படை மனித உரிமைக்கு முரணானவை என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.