Thursday, March 13, 2025
Google search engine
HomeSri Lanka24 மணிநேர பணிப்புறக்கணிப்பு! மருத்துவர்கள் அறிவிப்பு

24 மணிநேர பணிப்புறக்கணிப்பு! மருத்துவர்கள் அறிவிப்பு

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டமையை எதிர்த்து, இன்று காலை 8:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாள பணி ப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முடிவு செய்துள்ளன.

இது தொடர்பான செய்திக்குறிப்பில், நடந்த கொடூரமான தாக்குதல் குறித்து மருத்துவ நிபுணர்கள் சங்கம், ஆழ்ந்த அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.இந்தச் செயலை சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இதுபோன்ற வன்முறை சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், சுகாதார அமைப்பின் நேர்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

எனவே, விரைவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்தவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், அந்த சங்கம் திகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

மருத்துவர்களுக்கு, குறிப்பாக இரவு ஷிப்டுகளில் பணிபுரியும் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் சிறந்த வசதிகளுக்கான அவசரத் தேவையையும், சங்கம் உணர்த்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments