Thursday, March 13, 2025
Google search engine
HomeSri Lankaபிரபாகரன் வீரச்சாவு : வெளியான உத்தியோக பூர்வ அறிவிப்பு

பிரபாகரன் வீரச்சாவு : வெளியான உத்தியோக பூர்வ அறிவிப்பு

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழீழ மாவீரர் பணிமனை குறித்த உத்தியோகப்பூர்வ அறிக்கைகையை வெளியிட்டுள்ளது.

தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்றில் எமக்கு கிடைத்த பொக்கிசமான எமது தேசத் தலைவருக்கு, தலைவரின் வழியில் களமாடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம்பெயர், தாயக மற்றும் தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து வீர வணக்கம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும் நடாத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அனைவரும் ஒன்றிணையக்கூடிய ஐரோப்பிய நாடொன்றிலும் 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் உலகம் போற்றும் வகையில் பேரெழுச்சியாக வீர வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments