Thursday, March 13, 2025
Google search engine
HomeWorldஇணையத்தில் வைரலான ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படம்

இணையத்தில் வைரலான ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படம்

கனேடிய முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் வித்தியாசமான ஒரு புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

கனேடிய முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறிய புகைப்படம் ஒன்றே தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ(Justin trudeau), இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்களின் செல்வாக்கை இழந்ததால், கட்சியின் நெருக்கடியைத் தொடர்ந்து பதவி விலகியுள்ளார்.கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ தொடருவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த சில நாட்களில் மார்க் கார்னி பிரதமராகப் பதவியேற்க உள்ள நிலையில், இன்று புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்.

கனடாவில் எம்.பி.யாக இருந்தவர் பதவி விலகியதும் தான் அமர்ந்திருந்த நாற்காலியை கொண்டு செல்லலாம் என்பது நடைமுறை ஆகும்.இது அவரது பதவிக்காலம் முடிவடைவதைக் குறிக்கும் ஒரு அடையாள ரீதியான ஒரு சமிக்ஞை ஆகும். அந்தவகையில், ட்ரூடோ தனது ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கதிரையை நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும் தருணத்தை படம் பிடித்த புகைப்படக் கலைஞர் அதனை பகிர்ந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments