Thursday, March 13, 2025
Google search engine
HomeNewsயாழ் சுடலையில் இருளில் தங்கும் காவல்துறையினர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு

யாழ் சுடலையில் இருளில் தங்கும் காவல்துறையினர் – எழுந்துள்ள குற்றச்சாட்டு

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட யாழ்ப்பாணம் நல்லூர் (Nallur) பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட காவல்துறையினர் மின்னொளி வசதிகள் இன்றி இருளில் தங்க வேண்டிய துப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் .

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, அண்மையில் சித்திப்பாத்தி மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதியும் (Jaffna) குறித்த பகுதியை பார்வையிட்டு சென்றார்.குறித்த பகுதியின் பாதுகாப்புக்காக இரு காவல்துறையினர் 24 மணித்தியாலமும் பாதுகாப்பு கடமையில் உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இன்றி இருளில் காத்திருக்க வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் மயானத்தில் உணவு உண்பதில் இருந்து தமது அன்றாட செயல்பாடுகளை இரவு நேரங்களில் மேற்கொள்வதற்கு மின்விளக்கு இன்மையால் பல்வேறு அசெளகரிகங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் நல்லூர் பிரதேச சபைச் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அது தொடர்பில் தாம் அவதானம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments