தனது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனக்கு இரண்டு பாதுகாவலர்களை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna) கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய(25) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது பாதுகாப்பிற்கு இதற்கு முன்னர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான பல சம்பவங்கள் இடம்பெற்றதை மேற்கோள்காட்டி அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும், கணேமுல்ல சஞ்சீவவின் கொலையையும் சுட்டிக்காட்டியதோடு இதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.