எல்லையை கடக்க முயன்ற இரண்டு சிறு குழந்தைகளை கொண்ட குடும்பமொன்று கியூபெக்கில் உள்ள காட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – கனடா எல்லையை கடக்க முயன்ற இரண்டு சிறு குழந்தைகளை கொண்ட குடும்பமொன்று கியூபெக்கில் உள்ள காட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீட்கப்பட்ட போது, உறைபணியில் நகர முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்ததாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் மணிக்கணக்கில் கடும் குளிருடன் அவர்கள் சிரமப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, குழந்தைகளின் தாயார் 911ஐ அழைத்து பொலிஸாருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
இதன்பின்னர், அப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழு அவர்களை ‘GPS’ தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.