விமானத்தில் பெண் பயணி ஒருவர் அநாகரீகமான முறையில் புகைபிடிக்கும் காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளிளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்கள் குறித்த செயற்பாட்டிற்கு தமது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனா்.
துருக்கியின்(turkey)இஸ்தான்புல் பகுதியில் இருந்து சைப்ரஸ் செல்லும் விமானமொன்றில் குறித்த அநாகரீக செயல் நடந்தேறியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விமானத்தில் நீல நிற புர்கா மற்றும் கண்ணாடி அணிந்தபடி பயணித்த ஒரு பெண் ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டு திடீரென புகைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
இதனை அந்த விமானத்தில் இருந்த ஊழியர்கள் கண்டித்த போதிலும் அவர் அதனை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விமான ஊழியர்கள் அந்த பெண்ணின் கையில் இருந்த சிகரெட் லைட்டரை பிடுங்கிய போது அவர் இருக்கையை தீ வைத்து எரிக்க முயற்சி செய்துள்ளார்.
விமான ஊழியர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் குறித்த சம்பவத்தினை அருகிலிருந்த பயணி ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்தக் காணொளி வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.