இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் மரண தண்டனை பெற்றுள்ளனர்.
சிங்கப்பூரில் கப்பல் தொழிலில் பணியாற்றி வந்த ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன் (34) மற்றும் கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இந்தோனேசிய அதிகாரிகளால் 2024 ஜூலை மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பயணித்த சரக்கு கப்பலில், 106 கிலோ கிரிஸ்டல் மெத் (Crystal Meth) போதைப்பொருளுடன் குறித்த மூவரும் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும், குறித்த தமிழர்கள், இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு எதிராக முடிவுகள் வந்துள்ளன. இது குறித்து மேலும் மேல்முறையீடு செய்யப்படும் வாய்ப்புகள் குறித்து தகவல்கள் வெளிவரவில்லை. இந்தியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம், இந்த விவகாரத்தில் தலையிடுமா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.