ஒரு மொழியை திணிப்பது எங்கள் தாய் மொழியை அழிக்கக்கூடியது என்பதால், அதை அனுமதிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே போதும், எந்த காரணத்தை கொண்டும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்தார்.
தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை. இன்னொரு மொழியை திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்று விடும் என்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில்தான் இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம்.
இருமொழி கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம். இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள் நாம். யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நாம் நிற்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.