டெல்லியில் இருந்து சிம்லாவுக்கு சென்ற அலையன்ஸ் ஏரின் 9I821 என்ற விமானம், தரையிறங்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிம்லா விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகள் பயணித்த விமானத்தில் குறித்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
விமானி உடனடியாக தகவல் வழங்கியதை அடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தற்போதைக்கு, விமானம் ஆய்வுக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.