கடந்த 21ஆம் திகதி இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்சியின் போது ஏற்பட்ட தவறே காரணம் என தொிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும் போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தொியவருகையில்்
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதற்கு பயிற்சியின் போது ஏற்பட்ட தவறே காரணம் என
நெடுஞ்சாலை ஆய்வுச் சுற்றுலாவொன்றில் நேற்றையதினம்(23.03.2025) கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி வாரியபொல மினுவாங்கொட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து குறித்த விமானம் விபத்திற்குள்ளானதன் காரணம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்சியின் போது ஏற்பட்ட தவறே காரணம் என அமைச்சா் பிமல் ரத்நாயக்க தொிவித்துள்ளாா்.
விமானத்தின் வயது மற்றும் இயந்திரத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. விமானத்தில் பயிற்சிக்கு போனவர்கள் செய்த தவறே குறித்த விபத்து ஏற்படக் காரணம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.