வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணி நடத்த தயாராக இருந்த 33 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி – பத்தஹேவாஹட்டா தொகுதியில் சமகி ஜன பலவேகய வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணி நடத்த தயாராக இருந்த 33 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பிட்டிய பகுதியில் இதற்காகத் தயாரிக்கப்பட்ட 08 வாகனங்கள் கண்டி தலைமையக பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கண்டி தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.