இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் மழை காரணமாக டெங்கு நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் குறித்த பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி, கொழும்பு நகரப் பிரிவு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதிகளில் டெங்கு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு களத் திட்டத்தை நடத்தவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
இந்த விழிப்புணா்வுத் திட்டம் மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தொிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வீடுகள், பள்ளிகள், பணியிடங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் உள்ள பிற வளாகங்கள் கள ஆய்வுக் குழுக்களின் பங்கேற்புடன் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.