கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வரும் 16-வது சர்வதேச திரைப்பட விழா பல்வேறு சர்ச்சைகளுக்கு மையமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு பெங்களூர் திரைப்பட விழாவுக்கு அழைக்கப்படாத நடிகை ராஷ்மிகா மந்தனா, “கர்நாடகா எங்கே இருக்கிறது?” என கேள்வி எழுப்பியதாக கூறப்படும் விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
பெங்களூரில் நடைபெற்று வரும் 16-வது சர்வதேச திரைப்பட விழாவில் கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வரும் 16-வது சர்வதேச திரைப்பட விழா பல்வேறு சர்ச்சைகளுக்கு மையமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு பெங்களூர் திரைப்பட விழாவுக்கு அழைக்கப்படாத நடிகை ராஷ்மிகா மந்தனா, “கர்நாடகா எங்கே இருக்கிறது?” என கேள்வி எழுப்பியதாக கூறப்படும் விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
பெங்களூரில் நடைபெற்று வரும் 16-வது சர்வதேச திரைப்பட விழாவில் கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கன்னட திரையுலக நட்சத்திரங்களை கடுமையாக சாடிப் பேசினார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக நடத்தப்பட்ட யாத்திரையில் கன்னட திரை நட்சத்திரங்கள் பங்கேற்க மறுத்தது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“உங்களது பிரச்சனைக்காக என்னிடம் தானே நீங்கள் வரவேண்டும்.. அப்போது நான் உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்” எங்களுக்கு நடிகர், நடிகைகள் எப்படி வர வைக்க வேண்டும் என தெரியும்.. எந்த நட்டை எங்கே முறுக்க வேண்டும் என தெரியும் என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தொனியில் டிகே சிவகுமார் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
டிகே சிவகுமாரின் இந்த பேச்சுக்கு பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகாவின் உரிமைக்கான போராட்டத்தில் கன்னட நடிகர்கள் பங்கேற்காததால் ஏற்பட்ட வருத்தத்தில் டிகே சிவகுமார் பேசியது சரியே என அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புஷ்பா-2 படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த ஆண்டு பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவுக்கு ராஷ்மிகா மந்தனாவை அழைத்தபோது, அவர் “நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன்.. ஆமா.. கர்நாடகா எங்கே இருக்கிறது?” என நக்கலாக கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கனிகா இது தொடர்பாக கூறுகையில், “2024-ம் ஆண்டு பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.
அப்போது ராஷ்மிகா மந்தனா அழைக்கப்பட்டார்; ஆனால் ஹைதராபாத்தில் இருக்கிறேன்.. கர்நாடகா எங்கே இருக்கிறது என கேட்டவர் ராஷ்மிகா. இத்தனைக்கும் கன்னட சினிமாவில்தான் அவர் அறிமுகமானார்.
இதனால் ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்; மேலும் கன்னட சினிமாக்களுக்கு மாநில அரசு மானியம் தருவதை நிறுத்தியாக வேண்டும். இது தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு கடிதமும் அனுப்ப போகிறேன். கன்னட சினிமா வர்த்தகசபையினர் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டுதான் இருக்க வேண்டும்” என ஆவேசமாக தெரிவித்தார்.