அமெரிக்கா (America) – கனடா (Canada) இடையே வர்த்தக உடன்படிக்கைகள் மீதான விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, நாடாளுமன்றத்தை கலைத்து, முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளார்.
2015 முதல் கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஜனவரியில் பதவி விலகினார். இதனையடுத்து மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி நாட்டின் 24-வது பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில், தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் வரை இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலை ஏப்ரல் 28ஆம் தேதி நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலை முன்னிட்டு, மார்க் கார்னி தனது பிரசாரத்தை தீவிரமாகத் தொடங்கியுள்ளார். அமெரிக்கா-கனடா வர்த்தக உறவை சீரமைப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர் தனது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாக சா்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Trump), கனாடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிவிதிப்பை அதிகரித்ததை அடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப்போர் தீவிரமடைந்துள்ளதுள்ள நிலையில் கனடா பிரதமரின் மேற்குறித்த திடீர் முடிவு சா்வதேச நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.