பாம்பன் புதிய தொடருந்து பாலம் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ராமநவமி நாளில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு தொடருந்து திணைக்கள பொது மேலாளர் ஆர்.என்.சிங் இதை உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2019 மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய இந்த புதிய பாலம் 535 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தொடருந்து துறை பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாலத்தை ஆய்வு செய்து, சில குறைபாடுகளை சுட்டிக்காட்டினார். இந்நிலையில் குறித்த குறைபாடுகள் நிவா்த்தி செய்யப்பட்டு மக்கள் சேவைக்காக குறித்த பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது.
பாலம் திறப்பு விழாவுடன், இராமேஸ்வரத்திலிருந்து புதிய தொடருந்து சேவையும் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் குறித்த விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள், இதற்காக இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே மேடை அமைக்கப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.