அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பே்ற்றதிலிருந்து, அவா் பல்வேறுப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் அவருடைய மற்றுமொரு புதிய நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பொன்று அமெரிக்காவில் வெளியாகியுள்ளது.
இதன்படி, அமெரிக்கா தனது நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களுக்கு 25% கூடுதல் வரியை விதிக்கவுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த முடிவை அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய வரி எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், இந்த முடிவால் உள்நாட்டு தொழில்முறையின் வளர்ச்சி மேம்படும் என்றும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும், அமெரிக்கா 80 இலட்சம் கார்கள் இறக்குமதி செய்துள்ளது, இதன் மதிப்பு 240 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.
மெக்ஸிகோ, தென்கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜெர்மனி ஆகியவை அமெரிக்காவுக்கு அதிகளவில் கார்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன.
இந்நிலையில் குறித்த புதிய வரி அமுலுக்கு வந்தால், உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை சில பொருளாதார நிபுணர்கள் இது வர்த்தக போர் ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையை உருவாக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.