Monday, April 28, 2025
Google search engine
HomeNewsதன்னம்பிக்கை கொண்ட மாணவர் தலைமுறையை உருவாக்குவதே எமது நோக்கம்

தன்னம்பிக்கை கொண்ட மாணவர் தலைமுறையை உருவாக்குவதே எமது நோக்கம்

உலகில் அறிவைப் பெறுவதற்காக, மாணவர்களை தயார்படுத்துவது மற்றும் தன்னம்பிக்கை கொண்ட மாணவர் தலைமுறையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வேலைவாய்ப்புச் சந்தைக்கு மட்டுமல்லாமல், சமூகத்தை வழிநடத்தக் கூடிய பொருளாதாரத்திற்கும் பங்களிக்க முடியுமான திறமையான இளைஞர்களை உருவாக்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும் போதே அவா் மேற்கண்டவாறு தொிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்குவதற்கான, புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்.

பாடசாலைகளுக்கிடையே வளங்களைப் பகிர்ந்து செல்வதில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கம். இதற்கு பிரஜைகளின் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments