Wednesday, April 30, 2025
Google search engine
HomeNewsயாழ்ப்பாணத்தில் ஒலி எழுப்பத் தடை?

யாழ்ப்பாணத்தில் ஒலி எழுப்பத் தடை?

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஒலி எழுப்பப்படுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வணக்கஸ்தலங்கள் மற்றும் ஒலி வழங்குனர்கள் குறித்த பிரதேசத்திற்குள் ஒலி எழுப்புவதற்கு இனி மருதங்கேணி காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த அறிவிப்பு வடமராட்சிகிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தியால் விடுக்கப்பட்டு அனைத்து பிரதேசங்களிலும் சுவரொட்டி மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments