Tuesday, April 29, 2025
Google search engine
HomeSri Lankaஅதிகரிக்கப்படும் அரச ஊழியரின் கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சி தகவல்

அதிகரிக்கப்படும் அரச ஊழியரின் கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சி தகவல்

துறைமுக அதிகாரசபை (Sri Lanka Ports Authority) ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிர்வாக இயக்குநர் பொறியாளர் கனக ஹேமச்சந்திர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

60,000. ரூபாவினால் குறித்த கொடுப்பனவு அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பனவு 160,000 ரூபாவக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிர்வாக இயக்குநர் பொறியாளர் கனக ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வருடம் வழங்கப்படவுள்ள 160,000 ரூபா கொடுப்பனவு ஏப்ரல் மாதத்தில் 80,000 ரூபாவாகவும், மீதமுள்ள 80,000 ரூபாய் டிசம்பர் மாதத்தில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், துறைமுக அதிகாரசபையினால் ஈட்டப்படும் லாபத்தில் 5 பில்லியன் ரூபாய் சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments