தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் அஜித்குமார் (Ajith Kumar).
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விடாமுயற்சி (vidaamuyarchi) திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்திருந்த நிலையில் அடுத்ததாக அவர் நடிப்பில் குட் பேட் அக்லி (good bad ugly) திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
குறிப்பாக, அஜித்தின் தீவிர ரசிகரான ஆதித் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குவதால், இது ஒரு “Fan Boy” சம்பவமாக இருக்கும் என்று படத்தின் டீசரே உணர்த்தியது. சமீபத்தில் வெளியான படத்தின் முதல் பாடலும் ரசிகர்களிடையே வெறித்தனமான வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “விடாமுயற்சி” படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் மற்றும் த்ரிஷா கூட்டணி இணைந்துள்ளது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.
ஆம், திரைப்படங்களை வெளியிடுவதற்கு முன்பு அதன் வியாபாரத்தை உறுதி செய்வதற்காக படத்தின் ஒரு பகுதியை திரையுலகில் உள்ள முக்கிய நபர்களுக்கு திரையிட்டு காட்டுவது வழக்கம்.
அதேபோல், “குட் பேட் அக்லி” படத்தின் முதல் 20 முதல் 30 நிமிட காட்சிகளை படக்குழுவினர் திரையிட்டு காட்டியுள்ளனர். படத்தை பார்த்த முக்கிய நபர்கள் அனைவரும் மிரண்டு போனதாகவும், படம் மிகவும் தரமாக வந்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முதல் விமர்சனமே இவ்வளவு பாசிட்டிவாக வந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.