கனடாவின் உதவி எங்களுக்கு தேவையில்லை என்றும் கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று எனவும் அமெரிக்க(us) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (donald trump) விமர்சித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் அளித்த பேட்டியில் இந்தக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நான் ஒவ்வொரு நாட்டுடனும், மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு வைத்துள்ளேன். கனடாவுக்கு அமெரிக்கா ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர்கள் மானியம் வழங்குவதால் அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இருக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு கனடாவின் பொருட்கள் தேவை இல்லை.
அவர்களின் ஆற்றல் எங்களுக்குத் தேவையில்லை. எங்களுக்கு எதுவும் தேவையில்லை. கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகும். எனக்கு கவலையில்லை. உண்மையில், கனடாவின் லிபரல் கட்சியின் ஆட்சியை சமாளிப்பது எளிது என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.