ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி ரவைகளை தனது பையில் மறைத்துக் கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்படும் போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ சமிக்ஞைப் படையில் கடமையாற்றியவர் என தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,
குறித்த நபர் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றியவராவார். இந்நிலையில் இவா் கடந்த 20ஆம் திகதி விடுமுறையில் அவரது இல்லத்திற்குச் சென்று மீண்டும் கடமைக்காக திரும்பியிருந்த போது, பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள், ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் வைத்து குறித்த சிப்பாயின் பயணப் பையை பரிசோதனை செய்து பார்த்த போது, பைக்குள் T-56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.