யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்திற்கான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக குரல் கொடுத்ததால்தான் நாடாளுமன்றத்தில் நான் எட்டு நாட்கள் நான் கதைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Archuna Ramanathan) தொிவித்துள்ளாா்.
ஒரு சுயேட்சைக் குழு உறுப்பினர் கதைப்பது உங்களுடைய அரசாங்கத்திற்கே அச்சத்தை ஏற்படுத்துகின்றதாக எனவும் அவா் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற நல்லூர் (Nallur) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்துள்ளாா்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தொிவிக்கையில்,
என்னால் பேசப்படாத விடயங்களை நான் பேசியதாக நாடாளுமன்றத்தில் பிமல் ரத்நாயக்க சொல்லியுள்ளார். நாடாளுமன்றத்தில் என்னையும் பேச அனுமதிக்கமாட்டீர்கள் நீங்களும் பேசமாட்டீர்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தக் கூட்டத்தின் போது ஆளுந் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அர்ச்சுனாவிற்கும் இடையில் பல்வேறு தடவைகள் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.