Thursday, March 13, 2025
Google search engine
HomeNewsகனடாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கனடாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கனடாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை அந்நாட்டின் முன்னணி வீட்டுமனை இணையதளமான ரெண்டல்ஸ்.சிஏ (Rentals.ca) வெளியிட்டுள்ளது.

கனடாவில் கொரோனாத் தொற்று தீவிரமடைந்திருந்த காலத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அறிவிடப்படும் பணம் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு வரையில் 4.6 வீதமாக அதிகரிக்கப்பட்டிருந்த வாடகைத் தொகை 2022 ஆம் ஆண்டில் 12.1 வீதமாக அதிகரித்திருந்ததோடு, 2023 ஆம் ஆண்டில் 8.6 வீதத்தினால் அதிகரித்திருந்தது. இதனால் வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ரெண்டல்ஸ் .சிஏ இணையத்தளமானது இவ்வாண்டு வாடகைத் தொகைகள் குறைவடையும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் , அதிகளவான வாடகை வீடுகள் தற்போது சந்தையில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments