Thursday, March 13, 2025
Google search engine
HomeNewsஇலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இறுதி யுத்த காலப்பகுதியில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளின் வாழும் உறவினர்களின் சங்க உறுப்பினர்கள் இன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி, அதற்கு சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக வாழும் உறவுகள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

ஆனால் இதுவரை எதுவிதமான தீர்வுகளும் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 18 ஆயிரத்துற்கும் அதிகமான உறவுகள் காணாமலாக்கப்படுள்ளனர். இது தொடர்பில் பல்வேறு வகையில் வடக்கு கிழக்கெங்கும் எமது சங்கம் போராட்டங்களை முன்னெடுத்து எமது வலிகளை வெளிப்படுத்தியிருந்தது.

இதே நேரம் இக்காலப் பகுதியில் நீதிவேண்டி போராட்டத்தை முன்னெடுத்த உறவுகளின் அன்னையர்கள் 300 இற்கும் அதிகமானோர் தமது அபிலாசைகளை எட்டாது இறந்துள்ளனர்.

ஆனால் தீர்வு தருகின்றோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஒவ்வொன்றும் தமது இயல்பான போக்கையே தொடர்ந்தும் முன்னெடுக்கின்றன. ஆனால் எமது மக்களுக்கு எதுவித தீர்வுகளோ நன்மைகளும் கிடைக்கவில்லை. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் எமது மக்களுக்கு இன்னமும் அதன் பலாபலன்கள் கிடைக்கவில்லை.

இவ்வாறான பின்னணியில் வரவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கின்றோம்.

அதன்படி இந்த எதிர்ப்பு நாளை வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

மேலும் எமது இந்த போராட்டத்துக்கு பல்கலைக்கழகம், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், பொது போக்குவரத்து மற்றும் அனைத்து தரப்பினரும் அதரவளிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments