ஜானிக் சின்னர் ஞாயிற்றுக்கிழமை (26) தனது இரண்டாவது தொடர்ச்சியான அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றினார்.
மெல்போர்ன் ராட் லேவர் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில், தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் நம்பர் 2 வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவை 6-3, 7-6 (4), 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
23 வயதான இத்தாலியரான சின்னர், 1992-93 இல் ஜிம் கூரியருக்குப் பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்துடன் மெல்போர்ன் பூங்காவை விட்டு வெளியேறிய இளைய வீரர் ஆவார்.
கடந்த ஜூன் மாதத்தில் சின்னர் உலகின் நம்பர் 1 வீரர் என்ற நிலகை்கு உயர்ந்தார். பின்னர், அவர் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக தனது நிலையை தக்க வைத்துக் கொண்டார்.
2019 ஆம் ஆண்டு முதல் தரவரிசையில் 1 ஆவது மற்றும் 2 ஆவது இடத்தில் இருக்கும் ஆண்களுக்கு இடையே நடைபெற்ற முதல் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டி இதுவாகும்.
2019 ஆம் ஆண்டு நம்பர் 1 இடத்தலிருந்த நோவக் ஜோகோவிச் 2 ஆம் நிலை வீரரான ரஃபேல் நடால் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்திருந்தார்.
கடந்த செப்டம்பரில் நடந்த அமெரிக்க ஓபன் உட்பட ஐந்து பெரிய போட்டிகளில் மூன்றை இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் வென்றுள்ளார்.